லசந்தவை கொல்ல குழு அனுப்பியவர் சரத் பொன்சேகாவா.. வெளியான அதிர்ச்சி தகவல்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ய குழுவை அனுப்பியவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவே என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அன்றிருந்த எதிர்க்கட்சி கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்ததாகவே அவர் குறிப்பிட்டார்.
மகிந்தவுக்கு எதிராக கருத்து
மேலும், சர்வதேச இணையதளம் ஒன்றிலும் வெளியிடப்பட்டிருந்ததையும் அவர் தெளிவுபடுத்தினார்.
தன் மீதுள்ள குற்றங்களை மறைப்பதற்காக சரத் பொன்சேகா, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சார்பாகவும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் பேசுகிறார். அது தொடர்பில் நாம் அதிகமாக கதைக்க விம்பவில்லை. சரியான சந்தர்ப்பத்தில் விபரங்களை தெரிவிக்கிறேன் என்றார் மனோஜ் கமகே.
ஜோசப் மைக்கல் பெரேரா மட்டுமல்ல ஒரு சந்தர்ப்பத்தில் ரணில் விக்ரமசிங்க மற்றும் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரரும் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதால் தனது பக்கம் குற்றம் இருப்பதால் அதை மறைப்பதற்காக ராஜபக்சவுக்கு எதிராக பேசுவதாக ஒரு சந்தேகம் எழுகிறது என மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
