போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவைப்படகு: கடற்படையினர் சுற்றிவளைப்பு
போதைப்பொருட்களை கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு உள்ளூர் பல நாள் இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த படகு, நேற்று(17.11.2024) இலங்கை கடற்படையினரால் இலங்கைக்கு மேற்கே 110 கடல் மைல் தொலைவில் உள்ள கடலில் வைத்து 5 பேருடன் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த இழுவை படகில் சுமார் 40 கிலோ போதைப்பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து சந்தேகநபர்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவை படகு கடற்படையினரால் மேலதிக விசாரணைக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் கரைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்னரும் 60 கிலோ நிறைக்கொண்ட போதைப்பொருட்களுடன் இழுவைப்படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam