முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி! பீதியடைந்த மக்கள்
முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால் மக்கள் பீதியடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (29.11.2024) மாலை நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் பாெருத்தப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலி எழுப்பியதையடுத்தே அப்பகுதி மக்கள் இவ்வாறு அச்சமடைந்துள்ளனர்.
அச்சம் தேவையில்லை
இதனையடுத்து, வட்டுவாகல் கடற்படை தளத்தில் ஒத்திகை பயிற்சி செய்யப்பட்டதால் இவ்வாறு ஒலி எழுந்ததாகவும் மக்கள் சுனாமி குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் அறிவித்துள்ளனர்.
மேலும், அனர்தம் இடம்பெறும் சாத்திய கூறுகள் இருந்தால் நாம் முற்கூட்டியே அறிவுறுத்தல் வழங்குவோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |