பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
பசுபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு (Vanuatu) தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கமானது 7.3 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.
புவியியல் ஆய்வு மையம்
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Following further assessment, NEMA confirms no strong currents or surges are expected following the 7.3M Vanuatu earthquake. Please be vigilant in beach or marine areas as there may be unusual currents over the next few hours. This is the final message relating to this event.
— National Emergency Management Agency (@NZcivildefence) December 17, 2024
இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கியதாக நியூசிலாந்து புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் வானுவாட்டு தீவை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |