சிறைக்குள் திடீர் சுகயீனம்.. திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திடீர் சுகயீனம்..
பலாங்கொட கஸ்ஸப தேரர் மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

திருகோணமலை சம்புத்த ஜெயந்தி விஹாரையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பிக்குகள் மற்றும் ஆறு சந்தேக நபர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, பலாங்கொட கஸ்ஸப தேரர், அவருக்கு ஏற்பட்ட ஒரு நோய் காரணமாக இரத்த பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri