சட்டத்தை பயன்படுத்தி வெளியேற்றிவிட்டு சபையை நடாத்துவேன் - தவிசாளர் எச்சரிக்கை!
சட்டத்தை பயன்படுத்தி வெளியேற்றிவிட்டு சபையை நடாத்த வேண்டி வரும் என வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதன் எச்சரித்துள்ளார்.
வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம்(23.01.2026) தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நடைபெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
கடுமையான கருத்து மோதல்
நேற்றைய அமர்வின் போது எருக்கலம் பிட்டி மயானம் புனரமைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் நா.பகீரதன் கருத்து தெரிவிக்கையில், எருக்கலம்பிட்டி இந்து மயானத்தில் உள்ள மண்டபமானது புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற தனிநபரால் கட்டி தரப்பட்டது. அதனை கட்டி தந்தவர் அதனை மீளவும் புனரமைப்பதற்கு தற்போது தீர்மானித்துள்ளார்.

எனவே அந்த நபரிடம் நிதியை பெற்று, பிரதேச சபையே அந்த வேலைத்திட்டத்தை செய்யலாம் என கூறினார்.
இதன்போது குறுக்கிட்ட இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் தயாபரன், அவ்வாறு வழங்க முடியாது என்று கூறி முரணபாட்டில் ஈடுபட, குறுக்கிட்டு உறுப்பினர் பகீரதன் "நீங்கள் பேருந்து தரிப்பு நிலையத்தை இடிக்க கையூட்டு பெற்றீர்கள்" என்றார்.
இதன்போது அங்கு கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டு சபையில் அமைதியின்மை நிலவியது.
இதன்போதே குறுக்கிட்ட தவிசாளர் ஜெசீதன் உறுப்பினர் தயாபரனை பார்த்து "சட்டத்தை பயன்படுத்தி வெளியேற்றிவிட்டு சபையை நடாத்த வேண்டி வரும். அவர் தனது கருத்தை சொல்வதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். நீங்கள் குறுக்கிடாதீர்கள். அந்த மண்டபத்தை கட்டியவரே மீள் புனரமைக்கட்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam