ஜோர்ஜியாவில் விசம் காரணமாக உயிரிழந்த 12 இந்தியர்கள்
ஜோர்ஜியாவில்(Georgia) கார்பன் மோனாக்சைட் விசம் காரணமாக குறைந்தது 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் திபிலிசியில் உள்ள இந்திய தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
13பேரின் உடல்கள்
இந்திய உணவகம் அமைந்துள்ள கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குறித்த 13பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
எனினும் சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்தநிலையில், ஜோர்ஜியாவின் உள்துறை அமைச்சகம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியர்கள்
அதில், முதற்கட்ட ஆய்வுகளில் இறந்தவர்களின் உடல்களில், காயங்கள் அல்லது வன்முறைக்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 12 பேரும் இந்தியர்கள் என்று இந்திய தூதரகம் கூறியிருந்தாலும், ஜோர்ஜியாவின் அமைச்சகம் 11 பேர் வெளிநாட்டினர் என்றும், ஒருவர் தனது குடிமகன் என்றும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
