யாழ். சுழிபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம்!
யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு(23.01.2026) அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு வெளியேறிய இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலஅவகாசம் தேவை
இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குறித்தான கடிதத்தை, 513ஆவது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி சில தினங்களுக்கு முன்னர் சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமாரிடம் கையளித்தனர்.

அதுபோல பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமும் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த பகுதியில் நீண்ட நெடுங்காலமாக முகாமிட்டு குடிகொண்டிருந்த இராணுவத்தினர் அராலி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டத்தரிப்பு படை முகாமானது 100 அடி நீளத்தை கொண்டதால் அதனை அகற்றுவதற்கு காலப்பகுதி தேவை என்பதால் அவர்கள் அங்கிருந்து வெளியேற சற்று தாமதமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.