இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
புதிய இணைப்பு
சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது இலங்கைக்கு சுனாமி அபாயம் நீங்கியுள்ளதாக இலங்கையின் சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.
எனவே இலங்கையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையை அண்மித்த இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 6.6 ரிச்டர் அளவில் இன்று (30) காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.
இதனால் நாட்டைச் சூழவுள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் வழங்கப்பட்டுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இந்து சமுத்திரத்தின் ஆழ்கடல் பகுதியில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
இந்தியப் பெருங்கடலில் நேற்று (29) காலை இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
அதில் ஒன்று ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகவும் பதிவானது. எவ்வாறாயினும், இந்த அதிர்ச்சிகளினால் நாடு பாதிக்கப்படாது எனவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன கூறியிருந்தார்.

இந்தியப் பெருங்கடலில் நேற்று மாலைத்தீவுக்கு அருகில் இரு நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேனா தெரிவித்திருந்தார்.
மேலும் இதற்கு முன்னதாக, ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்திருந்தது.
எனினும் தற்போது கரையோர மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri