சுனாமி பேரலை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்: வளிமண்டலவியல் திணைக்களம் விளக்கம்
நாளை பௌர்ணமி தினத்தில் சுனாமி ஏற்படக்கூடும் என மக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மத்தியில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
சுனாமி அல்லது பூகம்பம் ஏற்படும் நேரத்தையோ, திகதியையோ யாராலும் கணிக்க முடியாது எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கை உட்பட பல நாடுகளை சுனாமி பேரலை தாக்கிய நிலையில், நாளை 26 ஆம் திகதி அதேப்போன்று பேரலையொன்று உருவாகலாம் என போலி தகவல் பரவியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும்: சுவிஸ் நாடாளுமன்றில் வலியுறுத்தல்

சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையங்களின் அறிவிப்பு
இருப்பினும், நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்பட்டால் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் அமைப்பு நாட்டில் இருப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாக சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி உடுவப் பௌர்ணமி வருவதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழயுத்தத்தின் விளைவால் போராட்டம் நிறைந்த வாழ்க்கையையே போண்டாமணி வாழ்ந்தார்: தென்னிந்திய நடிகர் உருக்கம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 4 நாட்களில் எதிர்பாராத அளவு செல்வத்தை கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- உங்களுக்கும் லக் இருக்கா? Manithan