பிராந்திய பாதுகாப்பை இலங்கை கருத்தில் கொள்ள வேண்டும்: இந்திய தரப்பு வலியுறுத்தல்
இலங்கையும் பிராந்தியத்தில் உள்ள ஏனைய சுதந்திர நாடுகளும் கொள்கை முடிவுகளை எடுக்கும் போது அண்டை நாடுகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக இந்நாட்டின் முன்னாள் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் எம்.ஜே.அக்பர் தெரிவித்துள்ளார்.
பாத்ஃபைண்டர் அறக்கட்டளை ஏற்பாடு செய்த இணையக் கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை
இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையானது, ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிந்துணர்வை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையும் சுதந்திரமான கருத்துக்களைக் கொண்ட ஒரு சுதந்திர நாடு என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், முடிவெடுப்பதில் இந்தியாவின் பாதுகாப்பை அந்த நாடு கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |