டிரம்பின் முடிவுகளால் இலங்கையின் ஏற்றுமதிக்கு பாதிப்பு
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வர்த்தக கொள்கையின் எதிர்மறை தாக்கங்கள் இலங்கையின் ஏற்றுமதி துறையில் ஏற்படலாம் என பிரதி அமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொள்கை ஆடைத்தொழில், இறப்பர், தென்னை மற்றும் பிளாஸ்டிக் ஆகிய ஏற்றுமதித் துறைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தீர்வைகள் மற்றும் இறக்குமதி வரிகள் மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் என்ற தனி மனிதரைக் கண்டு அஞ்சும் ஆளும் கட்சியினர்: கேள்வி எழுப்பியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு
வர்த்தக உறவுகள்
டிரம்பின் புதிய கொள்கையின் எதிர்மறை தாக்கங்களை குறைப்பதற்காக இலங்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதுவர் அமெரிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, அமெரிக்காவுடன் நல்ல இருதரப்பு உறவுகளை பேணுவதற்கும், வர்த்தக உறவுகளை தொடர்ந்தும் வலுப்படுத்துவதற்கும் முயற்சி செய்கிறது என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |