போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குவைத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
டெலாவேர் மாநிலத்தில் உள்ள Dover Air Force Base தளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உயிரிழந்த அமெரிக்க படைவீரர்களின் உடல் மாற்று நிகழ்வில் (dignified transfer) கலந்துகொண்டு ரிசர்வ் படையின் ஆறு வீரர்களுக்கு அவர் மரியாதை செலுத்தியுள்ளார்.
விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
வெள்ளை நிற தொப்பி
அதன்போது Trump என்ற பெயருடன் உள்ள கோல்ஃப் தொப்பி அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த வெள்ளை நிற தொப்பியின் முன்புறத்தில் தங்க நிறத்தில் “USA” என்ற எழுத்துகள் இருந்தன.

கடந்த சனிக்கிழமை Mar-a-Lago கடற்கரை கிளப்பில் இருந்து வெளியிட்ட காணொளியில் போரின் தொடக்கத்தை அறிவித்தபோதும் இதே தொப்பியை ட்ரம்ப் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தொப்பியின் பக்கத்தில் 45 மற்றும் 47 என்ற எண்கள் தையலிடப்பட்டிருந்தன.
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
சல்யூட் செய்து மரியாதை
அது ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த இரு பதவிக்காலங்களை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். இந்த தொப்பி Trump Store மூலம் சுமார் 55 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இநதநிகழ்வின்போது, அமெரிக்க இராணுவக் குழுவினர் தேசியக் கொடியால் மூடப்பட்ட பெட்டிகளில் (transfer cases) உயிரிழந்த வீரர்களின் உடல்களை எடுத்துச் சென்றபோது, ட்ரம்ப் தொப்பியை அகற்றாமல் சல்யூட் செய்து மரியாதை செலுத்தியதாக காணொளி மற்றும் புகைப்படங்கள் காட்டுகின்றன.
இந்த நிகழ்வில் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப், துணை ஜனாதிபதி JD Vance, அவரது மனைவி Usha Vance, பாதுகாப்பு செயலாளர் Pete Hegseth உள்ளிட்ட பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அமெரிக்க இராணுவத்தினர்
மேலும், இணைந்த இராணுவத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவர் Dan Caine, வெள்ளை மாளிகை தலைமை பணியாளர் Susie Wiles மற்றும் ஈரானுடன் அணு திட்டம் குறித்து நடந்த பேச்சுவார்த்தைகளை வழிநடத்திய ட்ரம்பின் சிறப்பு தூதர் Steve Witkoff ஆகியோரும் அங்கு இருந்தனர்.

நிகழ்வின் போது ட்ரம்ப், JD Vance, Pete Hegseth மற்றும் பல இராணுவ அதிகாரிகள் இணைந்து குவைத்தில் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்காக பிரார்த்தனையும் செய்தனர்.
அமெரிக்க இராணுவத்தினர் தேசியக் கொடியால் மூடப்பட்ட பெட்டிகளில் அந்த ஆறு வீரர்களின் உடல்களை எடுத்துச் சென்று மரியாதையுடன் மாற்றும் நிகழ்வும் அங்கு நடைபெற்றது.