விளாடிமிர், நிறுத்து! எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்.. வரப்போகும் மோசமான நிலை
உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஓர் இரவு தாக்குதல் மிகவும் மோசமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதனால், தான் அதிருப்தி அடைந்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் தொலைபேசியில் உரையாடிய போது "விளாடிமிர், நிறுத்து!, வாரத்திற்கு 5,000 இராணுவ வீரர்கள் உயிரிழக்கின்றார்கள். போர்நிறுத்த ஒப்பந்தத்தை செய்துகொள்வோம்" என கூறியதாகவும் சமூக ஊடகங்கள் கூறுகின்றன.
நிலைமை மோசமாகலாம்
இந்நிலையில், கீவில் நடந்த ரஷ்யாவின் தாக்குதலில் குறைந்தது 12 பேர் வரை கொல்லப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்தத்தை அடைய ரஷ்யா மீது அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நேற்றையதினம்(23.04.2025) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி போர்நிறுத்த பேச்சுவார்த்தையை குழப்புவதாக கூறியிருந்தார்.
ரஷ்யா கையகப்படுத்திய கிரிமியாவை உக்ரைன் ஒருபோதும் அங்கீகரிக்காது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்த கருத்துக்கு இணங்கவே ட்ரம்ப் இவ்வாறு விமர்சித்திருந்தார்.

எவ்வாறாயினும், உக்ரைனில் நிலைமை மோசமாகலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam