கடுமையான பாதுகாப்பு எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடு
உலகின் கடுமையான பாதுகாப்பு எச்சரிக்கை கொண்ட ஆபத்தான நாடாக நீண்ட காலமாக கருதப்படும் லிபியா, தற்போது பல சாகச விரும்பி சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றது.
பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் தங்கள் மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ள போதிலும் லிபியாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு லிபிய ஜனாதிபதி முயம்மர் கடாபியின் மரணத்திற்கு பின்னர் அந்நாடு நீண்டகாலமாக உறுதியற்ற பொருளாதார நிலையில் இருந்து வந்தது.
கடுமையான பயண எச்சரிக்கை
இதனையடுத்து, லிபியாவில் உள்ள பல பிரிவுகளுக்கு இடையே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மோதல் நிலவி வருகின்றது.
இவ்வாறான நெருக்கடியான சூழலுக்கு மத்தியிலும் லிபியாவில் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இருப்பினும், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் லிபியாவிற்கான மிகக் கடுமையான பயண எச்சரிக்கைகளை இன்னும் பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
