ட்ரம்பின் மிரட்டலுக்கு பின்னர் ஈரான் மேற்கொள்ளும் அதிரடி நகர்வுகள்..
அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து, ஈரான் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் ஒன்றை எட்டாவிட்டால் கடும் விளைவுகளை ஈரான் எதிர்கொள்ள நேரிடும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இதனை தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து கட்டுபப்டுத்தி வருகிறது.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள்..
இந்த நிலையில், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், ஈரானிடம் மிகக் கொடூரமாக நடந்துகொள்ளும் நிலை ஏற்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

இதனிடையே, பாகிஸ்தானில் நாளை இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட உள்ளது.
அமெரிக்கா சார்பாக குழு ஒன்று புறப்பட்டுள்ள நிலையில், ஈரான் இந்த விவகாரத்தில் இன்னும் முடிவெடுக்கவில்லை என அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், பல இடைவெளிகள் உள்ளன, மேலும் சில அடிப்படைக் கருத்துக்களும் விவாதிக்கப்படாமல் அப்படியே உள்ளன என்றார்.
நீங்கள்தான் அனுமதி அளித்தீர்கள்.! ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு - இந்திய கப்பலில் இருந்து வந்த அவசர ஒலி