அமெரிக்க விசா முறையில் மாற்றம்! ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய கட்டுப்பாடுகள்
அமெரிக்கா விசாவிற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு இதய நோய், நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என்று ட்ரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாகத்தில் விசா வழங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ட்ரம்ப் நிர்வாகம்
அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கும் நபருக்கு தொற்று நோய் இருக்கிறதா, அவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் மற்றும் அவர்களின் மனநிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படும்.

இதில் தற்போது கூடுதலாக நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் ட்ரம்ப் நிர்வாகம் சேர்த்துள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.
புதிய கட்டுப்பாடு
அதில் விண்ணப்பதாரரின் உடல் நலன் எப்படி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், குறிப்பாக இதய நோய் , சுவாச நோய், புற்றுநோய், நீரிழிவு, வளர்சிதை மாற்ற நோய்கள், நரம்பியல் நோய்கள் மற்றும் மனநல நிலைமைகள் உள்ளிட்ட சில மருத்துவ நிலைமைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நோய்கள் பராமரிப்புக்கு லட்சக்கணக்கான டொலர் தேவைப்படலாம் அந்த செலவுகளை ஏற்கக் கூடிய வகையில் விண்ணப்பதாரர் இருக்கிறாரா என்பதையும் விசா அதிகாரிகள் மதிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் விண்ணப்பதாரரின் குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர் போன்ற குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையை மதிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.