கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு! சிக்கிய முக்கிய ஆதாரம்..
கொட்டாஞ்சேனை 16வது ஒழுங்கையில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய துப்பாக்கிதாரிகள் பயணித்த கார் பஞ்சிகாவத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றையதினம்(7) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றது.
மேலதிக விசாரணை
இதன்போது, ஒருவர் காயமடைந்துடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த நபரை சொகுசு காரில் வந்த ஒரு குழுவினர் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், துப்பாக்கிச்சூட்டை நடத்திய துப்பாக்கிதாரிகள் பயணித்த கார் பஞ்சிகாவத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரை கைவிட்டுவிட்டு துப்பாக்கிதாரிகள் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த கார் தற்பொழுது கொட்டாஞ்சேனை பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam