கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி
புதிய இணைப்பு
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று (07.11.2025) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்றையதினம் (07.11.2025) 16ஆவது வீதியில் நடந்துள்ளது.
இதன்போது, ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த நபரை சொகுசு காரில் வந்த ஒரு குழுவினர் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றக் கும்பல் தலைவர் பழனி ரெமோசனின் குழுவினர் பூகுடு கண்ணாவின் குற்றக் குழுவை சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri