அரச நிறுவனங்களின் செயல்திறன் குறித்த ஆய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் கருத்து மோதல்
இலங்கையின் அரச நிறுவனங்களின் செயல்திறன் குறித்த ஆய்வு அறிக்கைகளை வெளியிடுவதில், அரச முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்கவுக்கும், சிந்தனைக் குழுவான அட்வொகட்டா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோவுக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது.
அட்வொகாட்டாவின் பகுப்பாய்வு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், தவறான தரவுகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் பிரதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், 2023ஆம் ஆண்டில் அரச நிறுவனங்கள் கூட்டாக ரூபா 427 பில்லியனும், 2024இல் ரூபா 538 பில்லியனும் இலாபம் ஈட்டியுள்ளதாகவும், அரச நிறுவனங்களை சீர்திருத்தி பலப்படுத்துவதே அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிதி அமைச்சு அறிக்கை
அதற்குப் பதிலளித்த அட்வொகாட்டா பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ, தமது ஆய்வு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிதி அமைச்சு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார்.

நிதி அமைச்சின் தரவுகளை மேற்கோள் காட்டிய அவர், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 52 பிரதான அரச நிறுவனங்களின் இலாபம் ரூபா 52 பில்லியன் குறைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
மேலும், மொத்த இலாபத்தில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு (ரூபா 153 பில்லியன்) அரச வங்கிகள் மற்றும் பொதுமக்களின் சேமிப்புப் பணத்தை நம்பியிருக்கும் ஊழியர் சேமலாப நிதியிலிருந்தே (EPF) நேரடியாக வருகிறது என்றும், இத்தகைய எண்கள் மக்களைத் தவறாக வழிநடத்தக்கூடும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
வெளிப்படைத்தன்மையுடன் தரவு சார்ந்த விவாதத்தை ஊக்குவிப்பதே தமது நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan