ஈரானுக்கு பொருளாதார அழுத்தம் கொடுக்கும் ட்ரம்ப் - எண்ணெய் தடை நீக்கம்
ஈரானுக்கு எதிராக மேலும் இராணுவ தாக்குதல் நடத்துவதை விட, பொருளாதார ரீதியில் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதே சிறந்தது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானுடன் நடந்து வரும் மோதலில் அதிக பொறுமையுடன் குறைந்த அழுத்தத்தை பிரயோகித்து வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் விலை அதிகரிப்பு
முக்கிய எண்ணெய் கப்பல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா மீது விதிக்கப்பட்ட எண்ணெய் தடையை நீக்கும் வரை கடல் வழியை திறக்க மாட்டோம் என்றும் ஈரான் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் போரின் போது ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதால், உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறையிடம் பென்டகன் கேட்டுக்கொண்டுள்ளது.
தெஹ்ரான் மீதான தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள ட்ரம்ப் முயன்று வருவதால், இந்த விவகாரம் அவருக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.