தொடரும் பலத்த மழை - வான்பாயும் மட்டத்தில் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள்
காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள் இன்று (10.08.2026) காலை வான்பாயும் மட்டத்தை எட்டியுள்ளதாக அந்நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கம் வான்பாயும் மட்டத்திற்கு 1.2 அடி வரை எட்டியுள்ளதுடன், அந்நீர்த்தேக்கத்திற்கு கடந்த 24 மணிநேரத்தில் 25 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதேபோல் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் வான்பாயும் மட்டத்திற்கு 3.4 அடி வரை எட்டியுள்ளதுடன், கடந்த 24 மணிநேரத்தில் 29 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உச்ச கொள்ளளவில் மின் உற்பத்தி
இந்த இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதனைத் தொடர்ந்து கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய மற்றும் விமலாசுரேந்திர மின் உற்பத்தி நிலையங்களில் உச்ச கொள்ளளவில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கிடையில், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வான் கதவுகள் திறக்கப்படும் சாத்தியக்கூறுகள் நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மஸ்கெலியா ஓயா ஆற்றின் இருமருங்கிலும் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்