ரஷ்ய மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளை சந்திக்கவுள்ள ட்ரம்ப்
ரஷ்ய ஜனாதிபதியையும் உக்ரைனின் ஜனாதிபதியையும் தாம் அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று முன்னதாக ட்ரம்ப் காலக்கெடு விதித்திருந்தார்.
இந்தக் காலக்கெடு முடிவுறும் தறுவாயில், ட்ரம்பின் சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் நேற்று(06.08.2025) ரஷ்ய ஜனாதிபதி புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
தெளிவற்ற அறிக்கை
இதன் தொடர்ச்சியாகவே ட்ரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், இது தொடர்பில் ரஷ்யா இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
ரஷ்யா, இந்த சந்திப்பு தொடர்பில் தெளிவற்ற அறிக்கை ஒன்றையே வெளியிட்டுள்ளது.
ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் இரண்டு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 18 மணி நேரம் முன்

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

சன் டிவியில் 3 சீரியல்களின் சங்கமம் நடக்கப்போகிறது... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, ரசிகர்களுக்கு குட் நியூஸ் Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
