ரணில் - மைத்திரி முறுகலுக்கான முதன்மை காரணம்! விளக்கிய அநுர
கெரவலப்பிட்டியில் அமைத்துள்ள இலங்கையின் முதல் திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை கட்டுவதில் அப்போதிருந்த குழப்ப நிலையே ரணில் - மைத்திரி முறுகலுக்கான முதன்மை காரணம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(07) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கெரவலப்பிட்டி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை கட்டுவதில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியிருக்கிடையே முரண்பாடு ஏற்பட்டது.
முரண்பாடு
ஒருவர் கொரியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பியதோடு மற்றுமொருவர் ஜப்பானுடன் இணைந்து பணியாற்ற விரும்பினார். இதன் விளைவாக கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தை அப்போது கட்ட முடியாமல் போனது.
இதனால், மக்கள் இன்று அதிகமான பணத்தை மின் கட்டணத்திற்காக செலவழிக்கின்றனர். எந்த நாட்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினால் நாம் நன்மையடைவோம் என இருவரும் முரண்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டது.
எனினும், நாம் குறித்த மின் உற்பத்தி நிலையத்தை ஆரம்பித்து வைத்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




