அடுத்த பொலிஸ் மா அதிபர் யார்.. விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு
நாட்டின் 37ஆவது பொலிஸ் மா அதிபர் யார் என்பது குறித்த அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஜனாதிபதியின் பரிந்துரை
இதனை தொடர்ந்து நாட்டிற்கான புதிய பொலிஸ் மா அதிபராக பதவியேற்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு அதிகாரியின் பெயரை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைப்பார்.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர்களான லலித் பத்திநாயக்க மற்றும் அஜித் ரோஹண உள்ளிட்ட அதிகாரிகளில் ஒருவர் நாட்டின் 37ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படலாம்.
குறிப்பாக, தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பொலிஸ் தலைமையகத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா





நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
