ட்ரம்பின் வரி குறைப்புக்கான பேச்சுவார்த்தை! அமெரிக்க குழு இலங்கை வருகை
அமெரிக்க வர்த்தக அலுவலக பிரதிநிதி குழு ஒன்று இந்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு வருகை தரும் நிலையில், பரஸ்பர வரிகளை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை உருவாக்குவதில் அரசாங்க அதிகாரிகளுக்கு உதவயளிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரித் திட்டத்தின் கீழ், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இலங்கைப் பொருட்களுக்கு 20 சதவீத வரியை விதித்துள்ளது.
வருகையின் நோக்கம்
பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் ஆகியவற்றுக்கும் 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது, அத்தோடு மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு 19 சதவீத வரி, இந்தியாவிற்கு 50 சதவீத வரிவிதிக்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி குழுவின் வருகையின் நோக்கம் விதிக்கப்பட்ட வரிகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப அம்சங்களை ஆராய்வதற்காகவாகும்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 2024 ஆம் ஆண்டில் சுமார் 3.4 பில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், இலங்கை அமெரிக்காவுக்கான பொருட்களின் ஏற்றுமதி 366.7 மில்லியன் டொலர்களாக இருந்தது, இது 2023 உடன் ஒப்பிடும்போது 4.6 சதவீதம் அதிகமாகும்.
அமெரிக்காவின் பொருட்கள்
2024 ஆம் ஆண்டில், இலங்கைக்கான அமெரிக்காவின் பொருட்கள் இறக்குமதி 3.0 பில்லியன் டொலர்களாக இருந்தது, இது 2023 ஐ விட 6.1 சதவீதம் அதிகமாகும்.
புள்ளிவிபரங்களின்படி, இலங்கையுடனான அமெரிக்க பொருட்களின் வர்த்தக பற்றாக்குறை 2024 இல் 2.6 பில்லியன் டொலர்களாக இருந்தது, இது 2023 ஐ விட 6.3 சதவீதம் அதிகமாகும்.
இருப்பினும், வர்த்தக இடைவெளியைக் குறைக்க அமெரிக்காவிலிருந்து கூடுதல் கொள்முதல் செய்ய இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது. இதுவரை, உள்நாட்டு பயன்பாட்டிற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அமெரிக்க WTI எரிபொருள் மாதிரிகளை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
இருப்பினும், அமெரிக்காவால் முதலில் முன்மொழியப்பட்ட 44 சதவீத வரியை 20 சதவீதமாகக் குறைக்க இலங்கை எந்தெந்த பகுதிகளில் உடன்பாட்டை எட்டியுள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா



