பத்மேவுடன் 3 முன்னாள் அமைச்சர்களுக்கும் தொடர்பு! கசிந்த முக்கிய தகவல்
பாதாள உலகத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் 3 முன்னாள் அமைச்சர்கள் தொடர்புகளை பேணி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பத்மேவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதுவரை, கெஹல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சுமார் 30 பேர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஒப்பந்தக் கொலைகள்
இதேவேளை, பத்மேவுக்கு சொந்தமான நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் இடத்தையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் இரண்டு பாகிஸ்தானியர்களும் ஐஸ் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், ஒப்பந்தக் கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



