வரி விகிதங்கள் தொடர்பில் டொனால்ட் ட்ரம்பின் முக்கிய அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்களை விவரிக்கும் கடிதங்களை இன்று(4)முதல் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பத் தொடங்குவதாக தெரிவித்துள்ளார்.
இது, பல தனிப்பட்ட ஒப்பந்தங்களை செய்வோம் என்ற முன்னைய உறுதிமொழிகளை விட ஒரு தெளிவான மாற்றமாகும்.
10 நாடுகளுக்கு கடிதங்கள்
ட்ரம்ப் நேற்றைய தினம் அயோவாவுக்குப் பயணிப்பதற்கு முன்பு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலே இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ட்ரம்ப்,
“ஒரே நேரத்தில் 10 நாடுகளுக்கு கடிதங்கள் அனுப்பப்படும் என்றும், அதில் 20% முதல் 30% வரை வரி விகிதங்கள் உள்ளடக்கப்படும்.
எமக்கு 170ற்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன.எத்தனை ஒப்பந்தங்களை செய்ய முடியும். இவை மிகவும் சிக்கலானவை.
புதன்கிழமை வியட்நாமுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்தானதைத் தொடர்ந்து, சில நாடுகளுடன் மேலும் சில விரிவான ஒப்பந்தங்கள் கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
நேரடியான வரி விகிதம்
ஆனால் பெரும்பாலான நாடுகளுக்கு தனித்தனியாக பேசாமல், நேரடியாக வரி விகிதங்களை அறிவிப்பதே தனது விருப்பம்” என குறிப்பிட்டார்.
வரி மட்டுமின்றி வேறு வர்த்தகத் தடைகளான விவசாய இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடைகள் வரை உள்ள ஒப்பந்தங்களை நிறைவு செய்வதில் உள்ள சவால்களை ட்ரம்பின் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றது.
ஏப்ரல் மாதம், ட்ரம்ப் ஆலோசகர்கள், 90 நாட்களுக்குள் 90 ஒப்பந்தங்களை செய்வோம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
