ட்ரம்ப் விதித்த காலக்கெடு.. மீண்டும் நெருக்கடியில் சிக்கவுள்ள உலக நாடுகள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிக்கான 90 நாட்கள் இடைநிறுத்தத்தை நீடிக்கத் திட்டமிடவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிக்கான காலக்கெடு எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.
உலகின் பல நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் தொடர்பில் குறித்த நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்பந்தங்களுக்கு இணங்கவும் 90 நாட்கள் வரிவிதிப்பை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தார்.
பேச்சுவார்த்தைகள்
இந்நிலையில், குறித்த வரிவிதிப்பு காலக்கெடு முடிவுக்கு ஜூலை 9ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. நீடிப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களைச் செய்யாவிட்டால், அந்த நாடுகளுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் வர்த்தக அபராதங்களை விபரித்து ஒரு கடிதத்தை அனுப்புவதே அவரது நிர்வாக விருப்பம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், மே மாதத்திலும் இந்த மாத தொடக்கத்திலும் இதேபோன்ற கடிதங்களை அனுப்புவது குறித்து அவர் முன்பு குறிப்பிட்டிருந்தார்.
"நான் அவர்களுக்கு ஒரு கடிதம், மிகவும் நியாயமான கடிதம் அனுப்ப விரும்புகிறேன், அதில் 'வாழ்த்துக்கள், நாங்கள் உங்களை அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப் போகிறோம்.
நீங்கள் 25 சதவீத வரி அல்லது 20 சதவீதம் செலுத்தப் போகிறீர்கள். நான் அதைச் செய்வதை விட சிறந்தது" என்று குறித்த கடிதத்தில் தெரிவிப்பேன்" என அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
