இலங்கையில் கடுமையாக அதிகரித்துள்ள எரிபொருளின் விலை..
இன்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வெள்ளை டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, வெள்ளை டீசல் ஒரு லீட்டரின் விலை 274 ரூபாவிலிருந்து 289 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
விலை உயர்வு
மண்ணெண்ணை லீட்டர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் விலை 178 ரூபாவிலிருந்து 185 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
92 ஒக்டேன் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 293 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
விலைகளில் மாற்றமில்லை
இதேவேளை, 4 ஸ்டார் யூரோ 4 ரக லங்கா சுப்பர் டீசல் மற்றும் 95 ஒக்டேன் யூரோ 4 ரக பெட்ரோல் என்பனவற்றின் விலைகளில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இந்த விலை மாற்றம் தொடர்பில் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |