உக்ரைன் மீது ட்ரம்ப் கடும் நடவடிக்கை..! அவசரமாக கூடிய ஐரோப்பிய தலைவர்கள்
ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பிலான முக்கிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஐரோப்பிய தலைவர்கள் அவசர ஒன்றுகூடலின் நடத்தியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிராக உக்ரைனுக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அத்துடன், உக்ரைனுக்கான இரகசிய தகவல் பரிமாற்றத்தினையும் அமெரிக்கா நிறுத்த தீர்மானித்துள்ளதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது.
ட்ரம்பின் நகர்வுகள்
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த முக்கிய நகர்வுகளின் அடிப்படையில் உக்ரைன் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவுமே குறித்த ஆலோசனை கூட்டம் இடம்பெற்றுள்ளது.
During a meeting with European Commission President @vonderleyen and @eucopresident António Costa in Brussels, we discussed strengthening the defense capabilities of Ukraine and all of Europe.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) March 6, 2025
Air defense, weapons and ammunition for Ukraine, timely deliveries, strengthening… pic.twitter.com/qRIll3liOL
இதன்போது, உக்ரைனுக்கு நிதி நெருக்கடி ஏற்படுவதை தடுக்க உக்ரைனுக்கு கடன் வழங்குவதற்கு ஏற்ப விதிகளை மாற்ற வேண்டும் என்று ஐரோப்பிய தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர். மேலும், ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர்.
❗️We need peace through strength — European Commission President Ursula von der Leyen at the EU security summit
— NEXTA (@nexta_tv) March 6, 2025
According to Ursula von der Leyen, EU leaders will be presented with a rearmament plan today, allocating up to €800 billion for defense investments.
"Extraordinary… pic.twitter.com/QIBzkWWosx
உச்சி மாநாடு குறித்து முன்னதாக பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஐரோப்பாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதுமையான ஆயுதங்கள் வாங்குவதில் மிகப் பெரிய அளவில் கூட்டு நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன், ஐரோப்பாவின் எதிர்காலத்தை வாஷிங்டன் மற்றும் ரஷ்யாவில் முடிவு செய்யப்பட வேண்டியது இல்லை என்றும் மக்ரோன் கூறினார்.
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
அதேவேளை, இந்த ஒன்றுகூடல் தொடர்பில் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில், "பிரஸ்ஸல்ஸில் நடந்த சந்திப்பின் போது, அன்டோனியோ கோஸ்டா, உக்ரைன் மற்றும் முழு ஐரோப்பாவின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம்.
வான் பாதுகாப்பு, உக்ரைனுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், சரியான நேரத்தில் விநியோகம், உக்ரைனின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துதல், ஐரோப்பிய ஒன்றிய அணுகல் பேச்சுவார்த்தைகள், ரஷ்யா மீதான தடைகள் மற்றும் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் மற்றும் தடைகளை மீறுவதை எதிர்கொள்வது ஆகியவையும் அடங்கும்.
ஐரோப்பாவின் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் உக்ரைனை வலுப்படுத்துதல் மற்றும் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கான பாதையில் அனைத்து ஆதரவிற்கும் விவாதித்த தலைமைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உக்ரேனியர்கள் தனியாக இல்லை என்பது மிகவும் முக்கியம் - நாங்கள் அதை உணர்கிறோம், அறிவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
Під час зустрічі з Президенткою Європейської комісії Урсулою фон дер Ляєн і Президентом Європейської ради Антоніу Коштою в Брюсселі обговорили посилення обороноздатності України та всієї Європи.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) March 6, 2025
ППО, зброя та боєприпаси для України, своєчасне постачання, зміцнення українського… pic.twitter.com/IlG63kHazk
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புடினிடமிருந்து ஐரோப்பாவை காப்பாற்ற பிரான்ஸ் நாட்டு அணு ஆயுதங்கள்: மேக்ரான் அதிரடி அறிவிப்பு News Lankasri

Personal Loan -யை விட வட்டி குறைவு.., Post Office-ன் இந்த திட்டத்தின் மூலம் எளிதாக கடன் வாங்கலாம் News Lankasri

ஜீ தமிழ் இதயம் சீரியலின் படப்பிடிப்பு முடிந்தது... கடைசிநாள் படப்பிடிப்பின் புகைப்படம் இதோ Cineulagam
