ஈரானை தாக்குவது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு
நவம்பரில் நடைபெறவிருக்கும் இடைக்கால நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இடைக்கால தேர்தல்
நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைக்காலத் தேர்தலுக்கு முன்பு, எந்தச் சூழ்நிலையிலும் ஈரான் தாக்கப்படாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக இரு தரப்பினரும் சமீபத்திய வாரங்களில் முன்மொழிவுகளைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.