ட்ரம்பால் தொடரும் பதற்றம்! பகிர்ந்துள்ள AI படத்தால் பெரும் பரபரப்பு..
கிரீன்லாந்தில் அமெரிக்க தேசிய கொடியை ஏந்தி நிற்பதுபோல், தனது AI படத்தை தனது சமூகவலைத்தளத்தில் Truth Social தளத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் 2026 ஆம் ஆண்டு முதல் கிரீன்லாந்து அமெரிக்க பிரதேசமாக நிறுவப்பட்டது" என்று எழுதப்பட்டுள்ளது.
ட்ரம்ப் மிரட்டல்
ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது.
இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.
இதுதொடர்பாக டென்மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த டென்மார்க், பிரித்தானியா, பிரான்ஸ், பின்லாந்து ஜெர்மனி உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதலாக 10% வரி விதித்து ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டார்.
இந்நிலையில், கிரீன்லாந்தை ஒப்படைக்காவிட்டால், ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிக்கும் என்றும், இதில் 100% உறுதியாக உள்ளதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் மிரட்டல் வைத்துள்ளார்.
கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுமா
ராணுவ படையெடுப்பு மூலம் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுமா என்ற கேள்விக்கு, No Comments என ஜனாதிபதி ட்ரம்ப் பதில் அளித்தார்.
இந்நிலையில், கிரீன்லாந்தில் அமெரிக்க தேசிய கொடியை ஏந்தி நிற்பதுபோல், தனது AI படத்தை Truth Social தளத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.

அப்புகைப்படத்தில் 2026 ஆம் ஆண்டு முதல் கிரீன்லாந்து அமெரிக்க பிரதேசமாக நிறுவப்பட்டது" என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும், கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா நாட்டை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டும் ஒரு AI படத்தையும் பகிர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கனடா நாட்டை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக இணைக்கவேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri