ஈரானில் யாருமே மிஞ்சவில்லை! ட்ரம்பின் அதிரடிப் பேச்சால் மீண்டும் பதற்றம்..

Donald Trump United States of America Iran Iran-Israel War
By Shadhu Shanker Oct 26, 2026 07:47 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் தலைவர்கள் எவரும் எஞ்சியிருக்கவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு யாரைக் கண்டுபிடிப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, ஈரானைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாருடன் பேச்சுவார்த்தை

மேலும் தெரிவித்த அவர், “அவர்களிடம் விமானங்கள் இல்லை, கப்பல்கள் இல்லை, தலைவர்கள் இல்லை, எதுவுமே இல்லை. அவர்களின் முதல் நிலைத் தலைவர் இல்லை; இரண்டாம் நிலைத் தலைவரும் இல்லை.

இதற்கு மேல் பேசுவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், நாம் யாருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் இந்தக் கருத்துகள் அடங்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஈரானில் யாருமே மிஞ்சவில்லை! ட்ரம்பின் அதிரடிப் பேச்சால் மீண்டும் பதற்றம்.. | Trump Says Gotta Stop Killing Iran Leaders

போர் ஆரம்பித்த முதல் சில வாரங்களில் அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்ட மொஜ்தபா கமேனியும் கடுமையாகக் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் அறிக்கைகளை வெளியிட்டு வந்தாலும், இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. கடந்த ஒன்பது மாதங்களாக இடையிடையே மோதல்களில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவும் ஈரானும், தற்காலிகமாகத் தாக்குதல்களை நிறுத்தியுள்ளன.

இருப்பினும், நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படலாம் என ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்து வருகிறார். இதற்கிடையில், ட்ரம்ப் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் படையையும் 10,000 கடற்படையினர் மற்றும் கடற்படைத் தரைப்படையினரையும் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணை 

அமெரிக்காவின் இந்தத் தீவிரமான நிலைப்பாட்டுக்கு மத்தியில், ஈரானும் சாத்தியமான புதிய தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, போர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும் தமது நாட்டின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாது என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

“சமீபகாலமாகப் புதிய போர் குறித்துப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், நான் ஏற்கனவே போருக்குப் பிந்தைய காலகட்டத்தைப் பற்றி சிந்தித்து வருகிறேன். போர் இடம்பெற்றாலும் இல்லாவிட்டாலும், எமது கொள்கைகள் மாறாது” என அவர் தெரிவித்ததாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், “அவர்கள் ஏற்கனவே இரண்டு முறை இதனைச் செய்துள்ளனர்; அதன் விளைவுகளையும் கண்டுள்ளனர்.

மீண்டும் முயற்சிக்க விரும்பினால், கடந்த காலங்களில் ஏற்பட்ட விளைவுகளிலிருந்து வேறுபட்ட முடிவு எதுவும் கிடைக்காது என்பதை அவர்கள் அறிவார்கள்” என்றும் அராக்சி கூறியுள்ளார். உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் இடம்பெற்று வந்துள்ளன.

ஈரானில் யாருமே மிஞ்சவில்லை! ட்ரம்பின் அதிரடிப் பேச்சால் மீண்டும் பதற்றம்.. | Trump Says Gotta Stop Killing Iran Leaders

கடந்த சில வாரங்களாக இந்த மோதல்கள் குறைந்திருந்த போதிலும், ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தினரின் அண்மைய கருத்துகள் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளன. ஹோர்முஸ் நீரிணை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அராக்சி, “தற்போதைய போர் அனைத்தையும் மாற்றியுள்ளது.

புதிய யதார்த்தங்கள் உருவாகி வருவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்துப் பாதைகளும், அந்த நீரிணையை நிர்வகிக்கும் முறையும் இனிமேல் முன்புபோல் இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

இயற்கையின் கோரத் தாண்டவம்! இதுவரையில் 12 உயிர்கள் பலி

இயற்கையின் கோரத் தாண்டவம்! இதுவரையில் 12 உயிர்கள் பலி

சஹ்ரான் குழுவை இயக்கியவர்களும் கஸ்ஸப்ப குழுவையும் இயக்கியவர்களும் ஒரே தரப்பா! வெடித்துள்ள சர்ச்சை

சஹ்ரான் குழுவை இயக்கியவர்களும் கஸ்ஸப்ப குழுவையும் இயக்கியவர்களும் ஒரே தரப்பா! வெடித்துள்ள சர்ச்சை


மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US