நடுவானில் சிதறிய அமெரிக்க போர் விமானம்! தொலைபேசி அழைப்பில் ட்ரம்ப் மறுப்பு..
அமெரிக்க போர் விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவம், ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார்.
NBC News வெளியிட்ட தகவலின்படி, குறுகிய தொலைபேசி அழைப்பில் இந்த சம்பவம் பேச்சுவார்த்தைகளில் தாக்கம் ஏற்படுத்துமா என்று கேட்கப்பட்டபோது, அவர் மறுத்துள்ளார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தை
அதற்கு பதிலாக அவர்,“இல்லை, ஒன்றுமில்லை. இல்லை, இது போர். நாங்கள் போரில் இருக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் வான்பரப்பிற்குள் பறந்த அமெரிக்காவின் இரண்டாவது F-35 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் வான்பரப்பில் ஒரு அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதன் குழுவினரைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் போர் விமானம் முற்றாக அழிக்கப்பட்டு வீழ்ந்து நொறுங்கியுள்ளதாகவும், விமானம் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சாட்சி சொன்ன பிள்ளையானின் வதைமுகாம் பணியாளர்கள்! நீதிமன்றில் சிஐடியினர் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்கள்..