ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்! வான்தாக்குதல்களை நிறுத்தியுள்ள இஸ்ரேல்
ஈரான் பகுதியில் காணாமல் போன அமெரிக்க போர் விமான பணியாளர்களைத் தேடும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், அந்தப் பகுதியில் திட்டமிடப்பட்ட தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் தாமதப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
CNN, Associated Press (AP) மற்றும் Channel 12 ஆகியவற்றின் தகவலின்படி, தேடுதல் நடவடிக்கைகள் நடைபெறும் பகுதிகளில் தாக்குதல்கள் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்காலிகமாக நிறுத்தம்
CNN வெளியிட்ட தகவலில், இஸ்ரேல் அதிகாரி ஒருவர் அந்தப் பகுதியில் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை, Channel 12 வெளியிட்ட செய்தியில், மூத்த இஸ்ரேல் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, அந்தத் தாக்குதல்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், Associated Press வெளியிட்ட தகவலின்படி, மீட்பு நடவடிக்கைகள் காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் வான்தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை தொடர்பாக பேசிய இஸ்ரேல் அதிகாரி, “இந்நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் பெயர் வெளியிடப்படக்கூடாது” என்ற நிபந்தனையில் தகவல் வழங்கியதாக AP தெரிவித்துள்ளது.
இதேவேளை, Israel Defense Forces (IDF) இந்த தகவல்களை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam