மத்திய கிழக்கின் பொற்காலம் - ஈரான் புனரமைப்பை தொடங்கலாம்! ட்ரம்பின் திடீர் மனமாற்றம்
உலக அமைதிக்கு ஒரு மகத்தான நாள், அது நடக்க வேண்டும் என ஈரான் விரும்புகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் பதிவில், "உலக அமைதிக்கு ஒரு மகத்தான நாள், அது நடக்க வேண்டும் என ஈரான் விரும்புகிறது அவர்களுக்குப் போதும் என்றாகிவிட்டது.
அதுபோலவே, மற்ற அனைவருக்கும் அப்படித்தான்! ஹோர்முஸ் நீரிணையில், போக்குவரத்தை அதிகரிக்க அமெரிக்கா உதவும்.
நிறைய நேர்மறையான நடவடிக்கைகள் இருக்கும், பெரும் பணம் ஈட்டப்படும். ஈரான் புனரமைப்புப் பணிகளைத் தொடங்கலாம்.
பெரும் பணம் ஈட்டப்படும்..
நாங்கள் எல்லா விதமான பொருட்களையும் ஏற்றிக்கொண்டு, எல்லாம் நல்லபடியாக நடப்பதை உறுதி செய்வதற்காக அங்கேயே காத்திருப்போம். அது நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் உணர்கிறேன்.
அமெரிக்காவில் நாம் அனுபவிப்பதைப் போலவே, இது மத்திய கிழக்கின் பொற்காலமாக இருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதத்திலிருந்து இடம்பெற்று வந்த அமெரிக்க - ஈரானிய போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா கடுமையான எச்சரிக்கைகளையும் அச்சுறுத்தல்களையும் விடுத்து வந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம், ஈரான் தற்காலிக போர்நிறுத்தம் குறித்து அறிவித்த நிலையில், ட்ரம்ப், இந்த பதிவை இட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் Cineulagam