கந்தளாய் குளத்து காட்டுப்பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு
கந்தளாய் குளத்தை அண்டிய காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது நேற்றையதினம்(7.4.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அங்கிருந்த கள்ளச்சாராயத்தை அழித்ததுடன் உற்பத்தி நிலையத்தையும் பொலிஸார் தகர்த்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கள்ளச்சாராய உற்பத்தி இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, மதுபானம் காய்ச்சுவதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 1,600 லீட்டர் கோடா திரவம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சோதனையின் போது 8 பரல்களில் சேமிக்கப்பட்டிருந்த 1,600 லீட்டர் திரவம், மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் செப்புச் சுருள்கள், உற்பத்திக்கான ஏனைய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை கைது செய்யவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri