திடீர் தொழிநுட்பகோளாறு!அடையாள அட்டைகளை பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பைச் சீரமைத்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆட் பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
ஏனைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
அதன்படி, இன்று (08) முதல் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் அவசரத் தேவையுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தேசிய அடையாள அட்டை விபரங்களைச் சரிபார்த்தல் மற்றும் அரச, தனியார் நிறுவனங்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஏனைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கான மாற்று முறைகளை கடைபிடிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அனைத்து சேவைகளும் மீண்டும் தடையின்றி
அதன்படி, தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் இயல்பான பொதுச் சேவைகள் மற்றும் பிற அலுவலகப் பணிகள் மறு அறிவிப்பு வரை செயல்படாது.
கணினி அமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்டவுடன் அனைத்து சேவைகளும் தடையின்றி மீண்டும் தொடங்கும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam