நேற்றிரவு அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம்.. அவசர அவசரமாக வளைகுடாவுக்கு விரையும் ஸ்டார்மர்!
பிரித்தானியப் பிரதமர் fகெய்ர் ஸ்டார்மர், வளைகுடா நாடுகளுக்கு இன்று அவசர விஜயம் ஒன்றை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை ஆதரிப்பது மற்றும் அதனை நிலைநிறுத்துவது குறித்து பிராந்தியத் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
நேற்றிரவு எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள பிரதமர் ஸ்டார்மர், இது பிராந்தியத்திற்கும் உலகிற்கும் ஒரு நிம்மதியான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
இது குறித்து அவர் கூறுகையில், "இந்த போர்நிறுத்தத்தை ஆதரிப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் எமது நட்பு நாடுகளுடன் இணைந்து எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

இதனை ஒரு நிரந்தர ஒப்பந்தமாக மாற்றி, ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதே எமது இலக்கு” என தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முன்னிலையில் உள்ள வளைகுடா நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து, பிரித்தானியாவின் முழுமையான ஆதரவை பிரதமர் தெரிவிப்பார்.
தற்போதைய போர்நிறுத்தம் ஒரு நீண்டகால மற்றும் நிரந்தர இராஜதந்திர தீர்வாக மாறுவதற்கு பிரித்தானியாவின் அசைக்க முடியாத ஆதரவை அவர் வலியுறுத்துவார்.
உலகளாவிய வர்த்தகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை நிரந்தரமாகத் திறக்கப்படுவதை உறுதி செய்ய சர்வதேச முயற்சியில் பிரித்தானியா தொடர்ந்து தலைமை தாங்கும்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் பிரித்தானியா முன்னெடுக்கும் இந்த நகர்வு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 29 நிமிடங்கள் முன்
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri