ட்ரம்பின் வெற்றிக்கு பின் உலகின் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
அமெரிக்காவில் (US) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றுள்ள நிலையில் உலகின் முக்கிய பணக்காரர்களின் சொத்துமதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, உலகின் முதல் 10 கோடீஸ்வரர்கள், 64 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளனர்.
கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரே நாளில் பல பில்லியன் தொகை வருமானம் பெறுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகின்றது.
பரப்புரை நடவடிக்கைகள்
இதன்படி, எலான் மஸ்க் (Elon Musk) மாத்திரம் ஒரே நாளில் (06) 26.5 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ள நிலையில் உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான அவரின் சொத்து மதிப்பு தற்போது 290 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
ட்ரம்பின் பெரும் ஆதரவாளராக மாறிய எலான் மஸ்க், போட்டி அதிகமாகவுள்ள 7 மாகாணங்களில் தீவிர பரப்புரைகளும் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், அவரது டெஸ்லா நிறுவன பங்குகள் விலை பெருமளவு உயர்ந்துள்ளது.
அத்துடன், எலான் மஸ்க் மாத்திரமின்றி, அமேசானின் ஜெஃப் பெசோஸ், முகப்புத்தக (Facebook) நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க், ஆப்பிளின் டிம் குக் ஆகியோரின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, குறித்த பட்டியலின் அடிப்படையில் பிரெஞ்சு ஆடம்பரப் பொருட்களின் விற்பனையாளரான பெர்னார்ட் அர்னால்ட் மாத்திரம், 3 பில்லியன் டொலர் சொத்து மதிப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
