போர்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ட்ரம்ப் வழங்கியுள்ள உறுதி
மத்திய கிழக்கு போர் மற்றும் ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“அமெரிக்க மண்ணில் செயற்படும் சட்டவிரோத அந்நிய கும்பல்களையும் புலம்பெயர் குற்றவாளிகளையும் நான் வெளியேற்றுவேன். அமைதிக்கான முதல்படியாக மத்திய கிழக்கில் நாம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடைந்துள்ளோம்.
போர்களின் முடிவு
கடந்த நவம்பரில் நாம் வெற்றிபெற்றதன் மூலமே இது சாத்தியமானது. நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால் இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஏற்பட்டிருக்காது.
Amazingly, Trump called out Liz and Dick Cheney: “You know, when you don’t want to kill people in wars, they turn against you. It was Liz Cheney. She hated the concept of not going to war with everybody. Let’s kill everybody. Let’s spend a lot of money on military equipment. You… pic.twitter.com/hWOkUR06Ib
— v. vedici (@jerucamp) January 20, 2025
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் 4 ஆண்டுகளில் சாதித்ததை விட அதிகாரத்தில் இல்லாத நமது நிர்வாகம் கடந்த 3 மாதங்களில் அதிகமாக சாதித்துள்ளது.
ரஷ்ய - உக்ரைன் போரும் முடிவுக்கு கொண்டுவரப்படும். அத்துடன், 3ஆம் உலகப்போரையும் நிகழாமல் தடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |