ட்ரம்ப் பாப்பரசர் மீது வைத்துள்ள விமர்சனம்: ஈரானுடனான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த இத்தாலிய பிரதமர்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே ஈரான் போர் தொடர்பாக நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோம் மற்றும் வத்திக்கானுக்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, ரூபியோ ஏற்கனவே இத்தாலிய வெளி விவகார அமைச்சருடன் ஈரான் போர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்துள்ளார்.
இத்தாலிய பிரதமர் உடனான சந்திப்பு
ஈரான் மீதான போரை 'சட்டவிரோதமானது' என்று வர்ணித்துள்ள மெலோனி, இப்போரை விமர்சித்த பாப்பரசர் லியோ XIV மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடத்திய தாக்குதல்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வொஷிங்டன் மற்றும் வத்திக்கான் இடையேயான உறவைச் சீர்செய்யும் நோக்கில் ரூபியோ பாப்பரசரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பொதுவாக ட்ரம்புடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த மெலோனிக்கு, ஐரோப்பிய நாடுகள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் போப் மீதான ட்ரம்பின் விமர்சனங்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மீதான டிரம்பின் விமர்சனங்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! CCD பிரிவிற்கு அவசரமாக மாற்றப்பட்ட விசாரணைகள்
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam