ஈரானின் தலைமையை அகற்ற முயற்சிக்கும் ட்ரம்ப்: ரணில் கண்டனம்
ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் தலைமையை அகற்ற முயற்சிக்கிறார். ஒரு அரசாங்கத்தை அகற்றுவதாக இருந்தால் இந்த வன்முறை வழிமுறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுக்கும் தாக்குதல்கள் குறித்து இன்று (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் அவர் கூறியுள்ளார்.
உலக அரசியல் போக்குகள்
இது சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளுக்கு முரணானது என சுவிட்சர்லாந்தும் நோர்வேயும் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த விவகாரம் மிகவும் பாரதூரமானது என்றும், இவ்வாறான உலக அரசியல் போக்குகள் இலங்கைக்குச் சாதகமானவை அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் மட்டும் இலங்கையில் பெரிய தட்டுப்பாடு ஏற்படாது, ஏனெனில் ஏனைய நாடுகள் அதிக எண்ணெயை உற்பத்தி செய்கின்றன.
கப்பல்கள் மீது தாக்குதல்
ஆனால், ஈரான் தனது கடல் எல்லை வழியாக வரும் ஏனைய நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி போக்குவரத்தை முடக்கினால், அது பெரும் நெருக்கடியை உருவாக்கும். எனினும், தற்போது வரை அவ்வாறு நடக்கவில்லை.

ஜனாதிபதி ட்ரம்ப் உலகம் தனது விருப்பப்படி இயங்க வேண்டுமென எதிர்பார்க்கிறார், ஆனால் இது போன்ற ஆழமான பிரச்சினைகள் சிறிய நாடுகளுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam