நுவரெலியாவில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடல்
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்று (02) காலை முதல் மூடப்பட்டுள்ளன.
அந்த வகையில் நுவரெலியாவிற்கு வாடகை முச்சக்கரவண்டியில் சுற்றுலா நிமிர்த்தம் வருகைந்தந்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன் வரிசையில் காத்திருந்தனர்.
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் இன்றும் இரண்டாவது நாளாகவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கியுள்ளனர்.
தட்டுப்பாடு
மேலும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் நானுஓயா மற்றும் நுவரெலியாவில் சில நிலையங்களில் இங்கு பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பு காட்சி பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நிலவும் கேள்விக்கு அதிகமாக எரிபொருளை நுகர்வோர்கள் கொள்வனவு செய்து வருவதால் இவ்வாறு நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் தட்டுப்பாடு நிலவி வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.




உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam