ட்ரம்ப் - புடின் சந்திப்பே இறுதி முடிவு.. அமைதி பேச்சுவார்த்தை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு
துருக்கியில் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அதிக எதிர்பார்ப்புகள் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் சந்திக்க வேண்டியது அவசியம் என்று அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரி மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.
ஜெலென்ஸ்கி முன்வைத்த கருத்து
"இந்த விடயத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ஜனாதிபதி புடின் நேரடியாக தொடர்பு கொள்ளும் வரை இங்கு ஒரு திருப்புமுனை ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை என்பது எனது மதிப்பீடு" என்று தெற்கு துருக்கியில் நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு அவர் கூறினார்.
முன்னதாக, இஸ்தான்புல்லில் உள்ள ரஷ்ய அதிகாரிகளைச் சந்திக்க உக்ரைன் ஒரு குழுவை அனுப்பும் என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தினார்.
ஆனால் ரஷ்யா அவர்களை பெரிதாக நடத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். அங்காராவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கீழ் மட்ட" மாஸ்கோ தூதுக்குழுவை விமர்சித்தார்.
அதன் தலைவரும், ஜனாதிபதி உதவியாளருமான விளாடிமிர் மெடின்ஸ்கி, கிரெம்ளின் குழுவிடம் "தேவையான அனைத்து திறன்களும்" இருப்பதாக வலியுறுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
