உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகையில் இடம்பிடித்த இரண்டு இலங்கையர்கள்
உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை இதழில் இரண்டு இலங்கையர்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
போர்ப்ஸ்(Forbes) சஞ்சிகை 30 வயதுக்குட்பட்ட ஆசியாவின் திறமையாளர்கள் 30 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் இரண்டு இலங்கையர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வைல்ட் குக் புக்
முதலாமவராக வைல்ட் குக் புக் (Wild Cookbook) எனும் பெயரில் யூடியூப்பில் சமையல் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சரித் என் சில்வா இடம்பிடித்துள்ளார்.
கொவிட் தொற்றுக் காலத்தில் திறந்த வெளியில் சமைப்பதை internet sensation ஆக மாற்றியிருந்தார். இன்றைய நிலையில் பத்து மில்லியன் யூடியூப் பின்பற்றுனர்கள் மற்றும் 2.3 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்பற்றுனர்கள் அவரின் ரசிகர்களாக உள்ளனர்.
அவர் ஒரு படைப்பாளியாக மாத்திரமன்றி, கொழும்பில் WILDISH எனும் பெயரில் உணவகமொன்றை ஆரம்பித்ததன் மூலம் வர்த்தகராகவும் மாறியுள்ளார்.
போர்ப்ஸ் சஞ்சிகை
இரண்டாமவரான யானிக அமரசேகர சியகுணே என்பவர் இலங்கையின் முதலாவது ஒன்லைன் திருமண பதிவேடான(online wedding registry) சில்வர் ஐல் (Silver Isle) தளத்தை உருவாக்கியவர் ஆவார்.
திருமணப் பரிசுகள் தொடக்கம் விடுமுறையைக் கழிப்பது வரை வாழ்வின் முக்கிய கட்டங்களை மகிழ்வுடன் கழிப்பதற்கான ஏற்பாடுகளை புதியவழிமுறைகளில் அவர் ஏற்படுத்திக் கொடுக்கின்றார்.
அத்துடன் தற்போதைக்கு எல்.பி. பினான்ஸ் நிறுவனத்தின் சுயாதீன பணிப்பாளர்களில் ஒருவராகவும் செயற்படுகின்றார். இவர்கள் இருவரும் ஆசியாவின் 30 வயதுக்கு கீழ்ப்பட்ட திறமைசாலிகளாக போர்ப்ஸ் சஞ்சிகை அங்கீகரித்து கௌரவித்துள்ளது.





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
