மேற்கத்திய சக்திகளுக்கு பெரும் நெருக்கடியாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) தெரிவுசெய்யப்பட்ட விவகாரமானது, மேற்கத்திய சக்திகளிடையே பெரும் நெருக்கடி உணர்வை தூண்டியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் வாரம் பிரான்ஸிற்கு மேற்கொள்ளளவுள்ள விஜயத்தினை மேற்கோள்காட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த செய்தியில்,
ரஷ்ய ஜனாதிபதி
“தனது நண்பரான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக உக்ரைன் மீது கடும் நெருக்கடிகளை ட்ரம்ப் ஏற்படுத்துவார்.
மேலும், ரஸ்யாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நேட்டோ அமைப்புக்கும் அவர் சவாலாக மாறுவார்.
டிரம்ப் ஜனவரியில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில், அந்நாட்டுடனான புதிய வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்த தற்போது முதல் பல சர்வதேச முக்கியஸ்தர்களை சந்தித்து வருகின்றார்.
இஸ்ரேல் பணயக்கைதிகள்
அத்தோடு கனடா மற்றும் மெக்ஸிகோவுடன் ஒரு வர்த்தகப் போரை மேற்கொள்ளவுள்ளதாக அச்சுறுத்தியும் உள்ளார்.
மேலும், தமது பதவியேற்பு நாளுக்கு முன்னதாக காசாவில் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கின் நிலை கேள்விக்குறியாகிவிடும் என எச்சரிக்கையும் விடுத்திருந்தார்” என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |