வியட்நாம் மோசடி வழக்கு : கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை
வியட்நாமின் மிகப்பெரிய மோசடி வழக்கில், ரியல் எஸ்டேட் அதிபர் ட்ரூங் மை லானுக்கு ( Truong My Lan) வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், 68 வயதான அவர், தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான மேன்முறையீட்டை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கையிருப்பில் 3 வீதம்
முன்னதாக, நான்கில் மூன்றில் ஒரு பங்கு இழப்பை ஈடுசெய்தால், அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றலாம் என்றும் பரிந்துரைத்தது.

இந்நிலையில், ட்ரூங் மை லான் வியட்நாமின் 2022 மொத்த வெளிநாட்டு கையிருப்பில் கிட்டத்தட்ட 3 வீத, 12.5 பில்லியன் டொலர் அளவுக்கு மோசடி மற்றும் இலஞ்சம் கொடுத்ததற்காக அவர் ஏப்ரல் மாதம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
கடந்த 2012 மற்றும் 2022 க்கு இடையில் வான் தின் பாட் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவராக அவர், சைகோன் கூட்டுப் பங்கு வர்த்தக வங்கியை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தினார்.
இதனால் வங்கிக்கு 27 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri