ஈரான் போருக்குப் பிறகு ட்ரம்பின் மிகப் பெரிய திட்டம்! மத்திய கிழக்கில் அடுத்த அதிரடி
ஈரான் போர் முடிவடைந்த பின்னர் மத்திய கிழக்கிற்காக “மிகப் பெரிய திட்டம்” ஒன்றை உருவாக்கி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானை கட்டுப்படுத்துவதற்காக பிராந்திய நாடுகளை ஒன்றிணைப்பதும், இஸ்ரேலை அதன் அண்டை நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தச் செய்வதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய திட்டம்
இதற்காக அமெரிக்காவின் கூட்டணி நாடுகளை ஈரானுக்கு எதிரான பிராந்திய கூட்டமைப்பில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும், காஸா உள்ளிட்ட பிராந்திய மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
ட்ரம்பின் காஸா திட்டத்தின் அடுத்த கட்டத்தை முன்னெடுப்பது, இஸ்ரேல்–சிரியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது மற்றும் இஸ்ரேல்–லெபனான் உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவது ஆகியவையும் இதில் அடங்கும்.
ஈரான் போர்
அத்துடன், Abraham Accords ஒப்பந்தத்தை விரிவுபடுத்தி, இஸ்ரேல்–சவுதி அரேபியா இடையே இராஜதந்திர உறவை ஏற்படுத்துவதற்கும் அமெரிக்கா முயற்சிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் ஒக்டோபர் 27ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அது சவாலாக அமையலாம் என கூறப்படுகிறது.
எனினும், இஸ்ரேல் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்காமல் ட்ரம்ப் தனது திட்டத்தை முன்னெடுக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதுடன், முழுமையாக தயாராக இன்னும் சில வாரங்கள் தேவைப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.